427. ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து
அன்புக்குரிய சகோதரர் அந்தோணி முத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தமிழ் வலையுலக நண்பர்களிடம் உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் பதிவு இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, பல நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்துள்ளனர். இது வரை சேர்ந்துள்ள தொகையை வைத்து அந்தோணிக்கு ஒரு மடிக்கணினி (அவர் விரும்பிய configuration-இல்) வாங்கித் தர உத்தேசம். அதன் வாயிலாக கணினி சார்ந்த வேலை ஏதாவது செய்து சிறிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்று அந்தோணி உறுதியாக நம்புகிறார். உதவிய / வாழ்த்திய நண்பர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அந்தோணியின் மற்றொரு முக்கியத் தேவையான (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலியின் விலை கிட்டத்தட்ட 60000 ரூபாய். அதற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது. உங்களால் இயன்றதைச் செய்யலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா ? உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்மடலை பின்னூட்டத்தில் தெரிவித்தால், (பணம் அனுப்பத் தேவையான) என் வங்கிக் கணக்கு விவரங்களை மின்மடலில் அனுப்புகிறேன். நிற்க.
19.3.2008 தேதியிட்ட ஆனந்தவிகடனில், அந்தோணி பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. அவரது அசாத்திய தன்னம்பிக்கை அதில் மிளிர்வதைக் காண முடிகிறது. அந்தோணியின் சமீபத்திய பதிவையும் வாசிக்கவும்.
ஸ்கேன் செய்யப்பட்ட, ஆ.வி.யில் வந்த கட்டுரை கீழே:
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி: ஆனந்தவிகடன்
9 மறுமொழிகள்:
Test !
ஈர மனங்களை இணைக்கும் வேலையை இனிதே செய்யும் அன்புடன் பாலாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!
அன்புடன் அருணா
அன்புக்குரிய பாலா,
வணக்கம். இப்போதுதான் (இணையத்தில்) விகடனில் அந்தோணி பற்றிய செய்தி பார்த்தவுடன், உங்களுக்கு அனுப்பலாம் என்று வந்தால், அதற்கும் முன் அதை ஸ்கேன் செய்து பதிவேற்றியுள்ளீர்கள். உங்கள் அயராத தன்னார்வசேவைக்கு நன்றி என வாய்வார்த்தையில் சொல்வதை விட, உங்களின் தொடர்முயற்சிக்கு எதாவதொரு வகையில் உதவுவதுதான் சரியாக இருக்கும்! தொடருங்கள், என்றும் துணையிருப்போம்.
இறைவன் அருளாளும், நண்பர்கள் ஆசியாலும், அந்தோணி புது உலகை வலம் வரட்டும்!
என்றென்றும் அன்புடன்,
hello bala,
thanks for this post
if you can chat with me i need to talk about anthonys matter
yahoo messanger : maahans@yahoo.com
என்னாலான சிறிய தொகையை அனுப்புகிறேன் பாலா. மின்னஞ்சல் முகவரி வேறு பின்னூட்டத்தில்... (வெளியிடவேண்டாம் :-))
நன்றி பாலா
மிகுந்த நன்றிகள் பாலா.
நீங்கள் நலமாய் நீடு வாழ்க.
Aruna, Anbu, Mahi, Sethukkarasi, Madhimitha, சாம் தாத்தா,
Thanks !
உங்களின் சேவைகளைக் கண்டு மனமாற வாழ்த்தி தலைவணங்குகிறேன்.
நீ வாழ்க! வாழ்க
தோழமையுடன் - என் சுரேஷ்
Post a Comment